முன்னாள் காதலா
முன்னாள் காதலா நமக்காக நீ காதல் கோட்டை ஒன்று கட்டினாய்
ஆனால் உன் விருப்பம் போலவே மட்டுமே கட்டினாய்
என் இதயத்தில் நீ
இருக்கவேண்டுமென் மட்டுமே நீ நினைத்தாய்
நான் உன் இதயமாய்
இருக்க வேண்டுமென
நான் விரும்புவதை நீ மறுத்தாய்
காதல் பூவாக இருந்தால் போதும் என்றேன்
நான்
காதல் ரோஜாவாக தான் இருக்க வேண்டும் என்றாய் நீ
அக்காதல் ரோஜாவை ஏந்திய
என் கைகளில்
முட்களாய் குத்தியது உன் விருப்பங்கள்
உன்னுடன் கரைசேர வேண்டும் என்று நான் நினைத்தேன்
நீயே ஏற்கனவே அலைகடலாய் இருந்த
என் மனதை கிளிக்கும் படகாய் மட்டுமே இருந்தாய்
நீயும் நானும் சேர விரும்பி
அதில் நீ மட்டுமே இருந்தாய்
நான் இல்லாமலே போனேன்
கண்ணீரிலே மட்டுமே வளர்ந்த நம் காதல்மரம் அதுவே சாய விரும்பியது
வேரோடு சாய்ந்தது
பெண் என்றால் காதல் முறிந்த இடத்தில்
இன்னொரு காதல் மலர்ந்திருக்கும் என்பார்கள்
நானும் பெண்தான்
என் காதல் முறிந்த இடத்தில்
மலர்ந்தது இன்னொரு காதல் அல்ல
காதல் கவிதைகளே
ஏனெனில் உண்மையான காதலுக்கு
ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது
கவி
Comments
Post a Comment