ஆசிரியர்
என் ஓவியத்தின் மை நீ
என் வெற்றியின் ஆரம்பம் நீ
என் தோல்வியில் ஆறுதல் நீ
என் தொடக்கத்தின் புள்ளி நீ
எனக்கென உன் வாழ்க்கையை அர்ப்பணித்து குரு எனும் இடத்தில் இருந்து என்னை வழிநடத்தும் தெய்வம் நீ
தெய்வத்தின் வடிவத்தை நான் உணர்ந்ததில்லை உன்னை தினமும் காணும் அந்த நொடி தெய்வம் இருக்கின்றது என்பதனை நான் உணர்கிறேன்
எனக்குள் இருக்கும் என்னை கண்டறிய உதவும் தூண் நீ
என்னைப் பற்றி நான் அறிவதை விட நீ அறிவதே மேல் அதை நீ என்னிடம் விளக்குவதில் நீ படும் பாடு அதிலும் மேல்
இருந்தாலும் என்னை விழாமல் தாங்கிப் பிடிக்கும் கயிறு நீ அந்தக் கயிற்றைப் பிடித்து வெற்றியின் ஆடையை அணிந்து நான் என் வெற்றியை உனக்கே சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லும் நாள் வெகு தூரம் அல்ல நெருங்கி தான் வருகிறது பிடித்ததும் வருகிறேன் என் குருவாகிய தெய்வத்தை காண
இப்படிக்கு உன் மாணவி மற்றும் உன் மகள் கவிஸ்ரீ
💙👍
ReplyDelete