கடவுள் pass ஆவாரா?
கடவுள் இருக்கிறாரா இல்லையா
என சோதனை நடைபெறுகிறது
சோதனை செய்பவர்
பட்டம் படிச்ச விஞ்ஞானி இல்லை
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன்
பிடி பீரியடை (period) கடன் வாங்கி
கணக்கு டீச்சர்
காலாண்டுத் தேர்வு திருத்திய வினைத்தாள் குடுக்கும்பொழுது
நான் பாஸ் ஆனால் கடவுள் இருப்பதாகவும்
Fail ஆனால் கடவுள் இல்லையெனவும்
சோதனை செய்கிறான்
இந்த சோதனையில்
கடவுள் pass ஆவாரா?
Comments
Post a Comment