என் தனிமைக்குள் நீ
உனக்கு தெரியமா இல்லாத போதும் தனிமை
எனக்கு பழக்கம் தான்.
அந்த தனிமைக்குள் நான் எனக்காக கணவுகள் கண்டு கொண்டிருந்தேன்,
ஆம் அந்த தனிமை அவ்வளவு இனிமையானது.
கொஞ்சம் வேடிக்கையானதும் கூட நான் நினைப்பதை எல்லாம் செய்து கொண்டிருப்பே பல நேரங்களில் அந்தத் தனிமைக்குள் இசை விருந்தளிக்கும், தேனீர் சுவை கூட்டும், புத்தகங்கள் துணைபூட்டும், இ ைஏதும் இல்லை என்றாலும் துக்கம் அத்தனை சுகம் தரும்.
நீ வந்த பின்னும் தனிமை என்னிடமிருந்தது. அப்போதெல்லாம் உள் நிளைப்புகள் மட்டும் தான், அப்போதும் கூட தேநீர் புத்தகம் தூக்கம் இவை
எல்லாம் இருந்தது. இன்று நீ பிரிந்தாய் தனிமையின் வலி இப்போதுதான் உணர்கிறேன்.
என் அறை எங்கும் உன் நினைவுகள் என்னை தின்று
கொண்டிருக்கிறது.
உன் குரல் எப்போதும் அந்த தனிமைகள் கேட்டுக் கொண்டிருக்கிறது. என் தனிமையில் நேரங்கள் மெதுவாக நகர்கிறது.
நான் ரசித்து கேட்ட பாடல்களில் எல்லாம் உனது
நினைவுகள் மட்டும் தான் நிறைந்து இருக்கிறது.
போல திரு பாடல் கேட்டாலே கண்ணீரில் தலையணை நனைந்து விடுகிறது.
தேநீர் புத்தகமும் ஒரு ஓரமாய் தான், நான் உலகத்தின் பாரங்களை எல்லாம் மொத்தமாய் சுமப்பது போல் உணர்கிறேன்,
ஏன் எனக்கு மட்டும் இத்தனை கஷ்டங்கள் என கேள்விகள் ஆயிரம் என்னையே கேட்டுக்கொள்கிறேன். என் தனிமை இப்போது எனது உயிரை மெல்ல பிரிக்கும் சிறையென உணர்ந்தும் கூட நானே தான் என்னை அந்த சிறைக்குள் அமர்த்திக் பொற்கிறேன்.
Comments
Post a Comment