What's app Red heart emoji ❤️
இதுவரை உனக்கு அனுப்பியதேல்லை
சிவப்பு நிற
இதய எமோஜி (emoji)
எல்லோருக்கும் சுலபமாய்
அனுப்பமுடிகிறது
உன்னை தவிர!
அதனால்
அன்பில்லையென்று அர்த்தமில்லை
என் இதயம் உனக்காகவே
காத்திருக்கிறதென்பதற்கு
உனக்கனுப்பாமல் காத்திருக்கும்
சிவப்புநிற இதய எமோஜியும் கூட
ஒர் சாட்சியே!
நீ உம் என்று ஒருவார்த்தை
சொல்
உம்முடையதாகி விடுவோம்
நானும் என் இதயமும்!
Comments
Post a Comment