பெண்ணிற்கான கேள்வி?
விபரம் தெரிந்த வயதில் 'ஆம்பள பசங்களோட விளையாடனுமா? என்ற வினாவில் தொடங்கி
வயசுக்கு வந்த பிள்ளை வெளிய போகணுமா? என்ற வினாவிற்கு வந்தது
'பொம்பள புள்ளைக்கு படிப்பு எதற்கு? என்ற வினா 'கல்யாணம் எப்போ? என்ற வினாவோடு சேர்ந்து கொண்டது
அதற்கும் பதில் சொல்லி 'குழந்தை எப்போது? என்ற வினாவில் தாவி குதித்தேன்
வேலைக்குச் சென்றால் குழந்தையை யார் பார்ப்பது?' என்ற வினா சற்று வேகமாக முட்டியது
வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வினா முகத்திலறைகிறது
'ஒரு பெண்ணால் எப்படி முடியும்?
என்ற வினா மட்டும் வாழ்நாள் முழுவதும் குத்தி கிழிக்கிறது
-கவி
Comments
Post a Comment