தகுதியற்றவர் ஆவார் தோற்று தான் போகும் முயலாது முயற்சி நினைத்தது நடக்க வேண்டும் என்றார் நடந்ததனே எண்ணி கவலை கொள்ளாதே முயற்சித்து தோற்றுப் போய் நில் முயற்சித்தார் என்ற கர்ப்பம் இருக்கும். முயலாத போது தோற்றதை எண்ணி வருந்த தகுதியற்றவர் ஆவார் தகுதியற்றவர் வருந்துவதில் மட்டுமல்ல வாழ்விலும் தான் -கவி
Posts
- Get link
- X
- Other Apps
என் தனிமைக்குள் நீ உனக்கு தெரியமா இல்லாத போதும் தனிமை எனக்கு பழக்கம் தான். அந்த தனிமைக்குள் நான் எனக்காக கணவுகள் கண்டு கொண்டிருந்தேன், ஆம் அந்த தனிமை அவ்வளவு இனிமையானது. கொஞ்சம் வேடிக்கையானதும் கூட நான் நினைப்பதை எல்லாம் செய்து கொண்டிருப்பே பல நேரங்களில் அந்தத் தனிமைக்குள் இசை விருந்தளிக்கும், தேனீர் சுவை கூட்டும், புத்தகங்கள் துணைபூட்டும், இ ைஏதும் இல்லை என்றாலும் துக்கம் அத்தனை சுகம் தரும். நீ வந்த பின்னும் தனிமை என்னிடமிருந்தது. அப்போதெல்லாம் உள் நிளைப்புகள் மட்டும் தான், அப்போதும் கூட தேநீர் புத்தகம் தூக்கம் இவை எல்லாம் இருந்தது. இன்று நீ பிரிந்தாய் தனிமையின் வலி இப்போதுதான் உணர்கிறேன். என் அறை எங்கும் உன் நினைவுகள் என்னை தின்று கொண்டிருக்கிறது. உன் குரல் எப்போதும் அந்த தனிமைகள் கேட்டுக் கொண்டிருக்கிறது. என் தனிமையில் நேரங்கள் மெதுவாக நகர்கிறது. நான் ரசித்து கேட்ட பாடல்களில் எல்லாம் உனது நினைவுகள் மட்டும் தான் நிறைந்து இருக்கிறது. போல திரு பாடல் கேட்டாலே கண்ணீரில் தலையணை நனைந்து விடுகிறது. தேநீர் புத்தகமும் ஒரு ஓரமாய் தான், நான் உலகத்தின் பாரங்களை எல்லாம் மொத்தமாய் சுமப்பது ப...
- Get link
- X
- Other Apps
முன்னாள் காதலா முன்னாள் காதலா நமக்காக நீ காதல் கோட்டை ஒன்று கட்டினாய் ஆனால் உன் விருப்பம் போலவே மட்டுமே கட்டினாய் என் இதயத்தில் நீ இருக்கவேண்டுமென் மட்டுமே நீ நினைத்தாய் நான் உன் இதயமாய் இருக்க வேண்டுமென நான் விரும்புவதை நீ மறுத்தாய் காதல் பூவாக இருந்தால் போதும் என்றேன் நான் காதல் ரோஜாவாக தான் இருக்க வேண்டும் என்றாய் நீ அக்காதல் ரோஜாவை ஏந்திய என் கைகளில் முட்களாய் குத்தியது உன் விருப்பங்கள் உன்னுடன் கரைசேர வேண்டும் என்று நான் நினைத்தேன் நீயே ஏற்கனவே அலைகடலாய் இருந்த என் மனதை கிளிக்கும் படகாய் மட்டுமே இருந்தாய் நீயும் நானும் சேர விரும்பி அதில் நீ மட்டுமே இருந்தாய் நான் இல்லாமலே போனேன் கண்ணீரிலே மட்டுமே வளர்ந்த நம் காதல்மரம் அதுவே சாய விரும்பியது வேரோடு சாய்ந்தது பெண் என்றால் காதல் முறிந்த இடத்தில் இன்னொரு காதல் மலர்ந்திருக்கும் என்பார்கள் நானும் பெண்தான் என் காதல் முறிந்த இடத்தில் மலர்ந்தது இன்னொரு காதல் அல்ல காதல் கவிதைகளே ஏனெனில் உண்மையான காதலுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது ...
- Get link
- X
- Other Apps
காத்திருக்கிறேன் காகை கூட்டத்தில் வெள்ளை புறாவாக தனியாக தெரிந்தாய். பார்த்ததும் ரசித்தேன் காதல் கொண்டேன் உன்னிடம் வெளிக்காட்ட அச்சம் கொண்டேன் எங்கே சொன்னால் பார்ப்பதும் மறுக்கப்படுமோ என்று உன் கண்ணை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அர்த்தம் இல்லாத உணர்வை உணர்ந்தேன் பார்த்த விழிகளை விளக்க முடியவில்லை முயற்சித்து தோற்றுப் 'போய் நின்னேன் உன் விழிகளிடம் இந்த விழிகளை பார்த்து ஒரு முறையாவது சொல்ல வேண்டும் நீ எனக்கானவள் என்று சொன்னதும் உன் இதழ்களை புன்னகையைத் தவிர வேறு எந்த உணர்வையும் பார்க்க மன தைரியம் என்னிடம் இல்லை காத்திருக்கிறேன். உன் விழிகள் என் மேலே பட கவி
- Get link
- X
- Other Apps
கணங்கள் கழிகிறது.... எதை நோக்கித்தான் நிகழ்கிறது என் பயணம்..... எதை தேடித்தான் தொலைகிறது என் காலம்..... எங்குதான் மறையும் என்முன் நீளும் இந்தக் கானல்..... எப்போதுதான் தணியும் என் மனதின் தாகங்கள்.... எப்போதுதான் குறையும் என் மனம் விரும்பாத இந்த பாதையின் நீளம்.. பற்றற்ற பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்க மனம் நினைக்க வினாக்குறிகளுடன் கணங்கள் கழிகிறது....