என் தனிமைக்குள் நீ உனக்கு தெரியமா இல்லாத போதும் தனிமை எனக்கு பழக்கம் தான். அந்த தனிமைக்குள் நான் எனக்காக கணவுகள் கண்டு கொண்டிருந்தேன், ஆம் அந்த தனிமை அவ்வளவு இனிமையானது. கொஞ்சம் வேடிக்கையானதும் கூட நான் நினைப்பதை எல்லாம் செய்து கொண்டிருப்பே பல நேரங்களில் அந்தத் தனிமைக்குள் இசை விருந்தளிக்கும், தேனீர் சுவை கூட்டும், புத்தகங்கள் துணைபூட்டும், இ ைஏதும் இல்லை என்றாலும் துக்கம் அத்தனை சுகம் தரும். நீ வந்த பின்னும் தனிமை என்னிடமிருந்தது. அப்போதெல்லாம் உள் நிளைப்புகள் மட்டும் தான், அப்போதும் கூட தேநீர் புத்தகம் தூக்கம் இவை எல்லாம் இருந்தது. இன்று நீ பிரிந்தாய் தனிமையின் வலி இப்போதுதான் உணர்கிறேன். என் அறை எங்கும் உன் நினைவுகள் என்னை தின்று கொண்டிருக்கிறது. உன் குரல் எப்போதும் அந்த தனிமைகள் கேட்டுக் கொண்டிருக்கிறது. என் தனிமையில் நேரங்கள் மெதுவாக நகர்கிறது. நான் ரசித்து கேட்ட பாடல்களில் எல்லாம் உனது நினைவுகள் மட்டும் தான் நிறைந்து இருக்கிறது. போல திரு பாடல் கேட்டாலே கண்ணீரில் தலையணை நனைந்து விடுகிறது. தேநீர் புத்தகமும் ஒரு ஓரமாய் தான், நான் உலகத்தின் பாரங்களை எல்லாம் மொத்தமாய் சுமப்பது ப...
Posts
Showing posts from March, 2024
- Get link
- X
- Other Apps
முன்னாள் காதலா முன்னாள் காதலா நமக்காக நீ காதல் கோட்டை ஒன்று கட்டினாய் ஆனால் உன் விருப்பம் போலவே மட்டுமே கட்டினாய் என் இதயத்தில் நீ இருக்கவேண்டுமென் மட்டுமே நீ நினைத்தாய் நான் உன் இதயமாய் இருக்க வேண்டுமென நான் விரும்புவதை நீ மறுத்தாய் காதல் பூவாக இருந்தால் போதும் என்றேன் நான் காதல் ரோஜாவாக தான் இருக்க வேண்டும் என்றாய் நீ அக்காதல் ரோஜாவை ஏந்திய என் கைகளில் முட்களாய் குத்தியது உன் விருப்பங்கள் உன்னுடன் கரைசேர வேண்டும் என்று நான் நினைத்தேன் நீயே ஏற்கனவே அலைகடலாய் இருந்த என் மனதை கிளிக்கும் படகாய் மட்டுமே இருந்தாய் நீயும் நானும் சேர விரும்பி அதில் நீ மட்டுமே இருந்தாய் நான் இல்லாமலே போனேன் கண்ணீரிலே மட்டுமே வளர்ந்த நம் காதல்மரம் அதுவே சாய விரும்பியது வேரோடு சாய்ந்தது பெண் என்றால் காதல் முறிந்த இடத்தில் இன்னொரு காதல் மலர்ந்திருக்கும் என்பார்கள் நானும் பெண்தான் என் காதல் முறிந்த இடத்தில் மலர்ந்தது இன்னொரு காதல் அல்ல காதல் கவிதைகளே ஏனெனில் உண்மையான காதலுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது ...
- Get link
- X
- Other Apps
காத்திருக்கிறேன் காகை கூட்டத்தில் வெள்ளை புறாவாக தனியாக தெரிந்தாய். பார்த்ததும் ரசித்தேன் காதல் கொண்டேன் உன்னிடம் வெளிக்காட்ட அச்சம் கொண்டேன் எங்கே சொன்னால் பார்ப்பதும் மறுக்கப்படுமோ என்று உன் கண்ணை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அர்த்தம் இல்லாத உணர்வை உணர்ந்தேன் பார்த்த விழிகளை விளக்க முடியவில்லை முயற்சித்து தோற்றுப் 'போய் நின்னேன் உன் விழிகளிடம் இந்த விழிகளை பார்த்து ஒரு முறையாவது சொல்ல வேண்டும் நீ எனக்கானவள் என்று சொன்னதும் உன் இதழ்களை புன்னகையைத் தவிர வேறு எந்த உணர்வையும் பார்க்க மன தைரியம் என்னிடம் இல்லை காத்திருக்கிறேன். உன் விழிகள் என் மேலே பட கவி
- Get link
- X
- Other Apps
கணங்கள் கழிகிறது.... எதை நோக்கித்தான் நிகழ்கிறது என் பயணம்..... எதை தேடித்தான் தொலைகிறது என் காலம்..... எங்குதான் மறையும் என்முன் நீளும் இந்தக் கானல்..... எப்போதுதான் தணியும் என் மனதின் தாகங்கள்.... எப்போதுதான் குறையும் என் மனம் விரும்பாத இந்த பாதையின் நீளம்.. பற்றற்ற பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்க மனம் நினைக்க வினாக்குறிகளுடன் கணங்கள் கழிகிறது....
- Get link
- X
- Other Apps
அம்மா நம்மைப்பற்றி மட்டுமே சிந்திக்க ஒருத்தி இல்லையே? என்ன செய்கிறோம் என்று கேட்பதற்கும் நம் நலம் விசாரிப்பதற்கும் போன வேலை என்ன ஆச்சு என்று அக்கரை காட்டவும் காசு இல்லனா சொல்ல மாட்டியா என்று அதட்டவும் இப்படி நம்மைப்பற்றி மட்டுமே சிந்திக்க ஒருத்தி இல்லையே அப்படி ஒருத்தி இருக்கிறாள் நம்மைப்பற்றி மட்டுமே சிந்திக்க அம்மா என்ற பெயரில் நாம் தான் அவளை சிந்திப்பதில்லை.. - கவி
- Get link
- X
- Other Apps
பெண்ணிற்கான கேள்வி? விபரம் தெரிந்த வயதில் 'ஆம்பள பசங்களோட விளையாடனுமா? என்ற வினாவில் தொடங்கி வயசுக்கு வந்த பிள்ளை வெளிய போகணுமா? என்ற வினாவிற்கு வந்தது 'பொம்பள புள்ளைக்கு படிப்பு எதற்கு? என்ற வினா 'கல்யாணம் எப்போ? என்ற வினாவோடு சேர்ந்து கொண்டது அதற்கும் பதில் சொல்லி 'குழந்தை எப்போது? என்ற வினாவில் தாவி குதித்தேன் வேலைக்குச் சென்றால் குழந்தையை யார் பார்ப்பது?' என்ற வினா சற்று வேகமாக முட்டியது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வினா முகத்திலறைகிறது 'ஒரு பெண்ணால் எப்படி முடியும்? என்ற வினா மட்டும் வாழ்நாள் முழுவதும் குத்தி கிழிக்கிறது -கவி
- Get link
- X
- Other Apps
What's app Red heart emoji ❤️ இதுவரை உனக்கு அனுப்பியதேல்லை சிவப்பு நிற இதய எமோஜி (emoji) எல்லோருக்கும் சுலபமாய் அனுப்பமுடிகிறது உன்னை தவிர! அதனால் அன்பில்லையென்று அர்த்தமில்லை என் இதயம் உனக்காகவே காத்திருக்கிறதென்பதற்கு உனக்கனுப்பாமல் காத்திருக்கும் சிவப்புநிற இதய எமோஜியும் கூட ஒர் சாட்சியே! நீ உம் என்று ஒருவார்த்தை சொல் உம்முடையதாகி விடுவோம் நானும் என் இதயமும்!
- Get link
- X
- Other Apps
கடவுள் pass ஆவாரா? கடவுள் இருக்கிறாரா இல்லையா என சோதனை நடைபெறுகிறது சோதனை செய்பவர் பட்டம் படிச்ச விஞ்ஞானி இல்லை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிடி பீரியடை (period) கடன் வாங்கி கணக்கு டீச்சர் காலாண்டுத் தேர்வு திருத்திய வினைத்தாள் குடுக்கும்பொழுது நான் பாஸ் ஆனால் கடவுள் இருப்பதாகவும் Fail ஆனால் கடவுள் இல்லையெனவும் சோதனை செய்கிறான் இந்த சோதனையில் கடவுள் pass ஆவாரா?
- Get link
- X
- Other Apps
அப்பா அழகிய மாலைகளும், ஆபரணங்களும் அலங்கரிக்கிறது கோவில் கடவுளின் தோற்றத்தை!!!! இங்கே வீட்டில், எல்லோரையும் அலங்கரிக்க செய்து விட்டு, தான் மட்டும் எளிமையாய் ஏதோ ஒன்றை உடுத்தி கொண்டு திரிகிறது ஒரு கடவுள்..... பின்பு சரிதானே! தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ஒரு தந்தை என்னும் சாதாரண மனிதரின் முன்னே.....
- Get link
- X
- Other Apps
மரம் சொல்லும் கவிதை உயர்ந்து அடர்ந்து வளர்ந்து நின்றேன் நான் அனைவருக்கும் சுத்தமான சுகாதாரம் தந்து தாயாகிறேன் தேடி வருபவர்களுக்கு நிழல் தந்து தந்தையாகினேன் மனிதனின் சிந்தனைக்கு என்றும் சிகரமாகுகின்றேன் மழையே தருகிறேன்!!! என் மரத்தடி நிழலையும் தருகிறேன்!! உன் மனம் கவரும் வணமும் தருகிறேன்! உன் சுவாசம் காக்க என் சுவாசகாற்றும் தருகிறேன்!!! உன் உயிர் காக்க வந்த என்னை நறுக்கி செல்லாதே!!! நீ செல்லும் வழியெல்லாம் நட்டு செல்!!!
- Get link
- X
- Other Apps
அலைகள் என்றும் ஓய்வதில்லை தந்தை என்பவன் அந்த நிலவைப் போல தன்னுள் இருக்கும் கரடுமுரடான குணங்களை மறைத்து அழகான ஒளியை குடும்பத்திற்கு தருபவன். தாய் என்வபவள் கடலை போல அந்த அழகான ஒளியை பிரதிபலித்து அலையாக அடித்து குடும்பத்தை கரை சேர்ப்பவள். சந்திரன் கூட ஒரு நாள் ஓய்வதுண்டு அலைகள் என்றும் ஓய்வதில்லை. - கவி
- Get link
- X
- Other Apps
நட்பு பழகியது மாதக் கணக்கில் ஆனாலும் பாசம் அளவில்லாதது நம் சேர்ந்து வேலை செய்ததையும் நான் மறக்கவில்லை சேர்ந்து சிரித்ததையும் நான் மறக்கவில்லை நான். துவண்ட போதும் தோல் கொடுத்ததையும் நான் மறக்கவில்லை நட்பாக நம் உறவு மலர்ந்தாலும் இறுதியில் சகோதரியாக முடிய நான் வேண்டுகிறேன் உன்னிடத்தில் என் அன்பு தோழி பிரகல்யா உன்னிடத்தில் எனக்குப் பசித்தும் உணவளித்தாய் உறங்கினால் மடி தந்தாய் எனக்காகக் குரல் கொடுத்தாய் இறுதியில் உனக்குத் துணையாக இருக்க முடியாத நிலையில் தள்ளியது விதி விதி விளையாடத் தான் செய்யும் ஒரு நாளும் நம்மைப் பிரிக்க முடியாது இது என் மனதில் ஆழமாகப் பதிந்தது பதிந்தது எழுத்தில் அல்ல என் ரத்தத்தில் அது ஒரு காலமும் அழியாது என் உயிர் விண்ணில் சென்றாலும் அழியாதது நம் நட்பு முடிவில்லாமல் தொடர இறைவனை வேண்டி இக்கவிதையை உனக்குச் சமர்ப்பிக்கிறேன் உன் அன்பு தோழி கவிஸ்ரீ
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் என் ஓவியத்தின் மை நீ என் வெற்றியின் ஆரம்பம் நீ என் தோல்வியில் ஆறுதல் நீ என் தொடக்கத்தின் புள்ளி நீ எனக்கென உன் வாழ்க்கையை அர்ப்பணித்து குரு எனும் இடத்தில் இருந்து என்னை வழிநடத்தும் தெய்வம் நீ தெய்வத்தின் வடிவத்தை நான் உணர்ந்ததில்லை உன்னை தினமும் காணும் அந்த நொடி தெய்வம் இருக்கின்றது என்பதனை நான் உணர்கிறேன் எனக்குள் இருக்கும் என்னை கண்டறிய உதவும் தூண் நீ என்னைப் பற்றி நான் அறிவதை விட நீ அறிவதே மேல் அதை நீ என்னிடம் விளக்குவதில் நீ படும் பாடு அதிலும் மேல் இருந்தாலும் என்னை விழாமல் தாங்கிப் பிடிக்கும் கயிறு நீ அந்தக் கயிற்றைப் பிடித்து வெற்றியின் ஆடையை அணிந்து நான் என் வெற்றியை உனக்கே சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லும் நாள் வெகு தூரம் அல்ல நெருங்கி தான் வருகிறது பிடித்ததும் வருகிறேன் என் குருவாகிய தெய்வத்தை காண இப்படிக்கு உன் மாணவி மற்றும் உன் மகள் கவிஸ்ரீ
- Get link
- X
- Other Apps
ஒரு தலை காதல் நீ பார்க்கும் பார்வை அது விழியில்லை என்னை மயக்கும் மாய வலை தெரிந்தும் விழுவேன் உன் மடிசாய உன் கண் பார்க்க உன் விரல் பட அடடா கவி பாரதியை மிஞ்சும் என் கவிதை உன் காதலை வெல்லுமா என கேட்கிறேன் பதில் கூறாமல் செல்லாதே உன் புன்னகையில் விடையறிந்து என் வாழ்க்கையை உன்னோடு தொடர கொஞ்சம் அச்சம் கொண்டு அளவில்லா காதல் கொண்ட கரம் பிடிக்க கரம் ஏந்தி நிற்கிறேன் நீ பிடித்ததும் நம் வாழ்க்கை தொடர...